





மூலநோய் அறுவைசிகிச்சை (ஹெமோர்ஹாய்டெக்டோமி) என்பது மூல நோயை அகற்றுவதற்கான ஒரு சிறந்த அறுவை சிகிச்சை முறையாகும், இந்நோயின் காரணமாக உருவாகும் மூலநோய் கட்டிகள் உடலின் வெளிப்புறமாகவோ அல்லது உட்புறமாகவோ இருந்தாலும் சரி, இச்சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம். நமது பிரிஸ்டின் கேர் நிறுவனமானது, இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள மேம்பட்ட சிகிச்சை மையங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. மூல நோயின் காரணமாக உருவாகும் அசௌகரியமான மருத்துவ நிலையில் இருந்து விடுபட, மூலநோய் அறுவைசிகிச்சை நோயாளிகள் இங்கு மேற்கொண்டு பயனடையலாம். சரியான வழிகாட்டுதலுடன் கூடிய, பாதுகாப்பான அறுவை சிகிச்சையை பெற்றிட, ப்ரிஸ்டின் கேர் நிறுவனத்துடன் இன்றே ஆலோசனையைப் பதிவு செய்திடுங்கள்.
மூலநோய் அறுவைசிகிச்சை (ஹெமோர்ஹாய்டெக்டோமி) என்பது மூல நோயை அகற்றுவதற்கான ஒரு சிறந்த அறுவை சிகிச்சை முறையாகும், இந்நோயின் காரணமாக உருவாகும் மூலநோய் கட்டிகள் உடலின் வெளிப்புறமாகவோ அல்லது உட்புறமாகவோ இருந்தாலும் சரி, ... மேலும் வாசிக்க
Free Consultation
Free Cab Facility
இல்லை செலவு EMI
Support in Insurance Claim
1-day Hospitalization
சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA
Choose Your City
It help us to find the best doctors near you.
அகமதாபாத்
பெங்களூர்
புவனேஸ்வர்
சண்டிகர்
சென்னை
கோயம்புத்தோர்
டெல்லி
ஹைதராபாத்
இந்தூர்
ஜெய்ப்பூர்
கொச்சி
கொல்கத்தா
கோழிகோட்
லக்னோ
மதுரை
மும்பை
நாக்பூர்
பாட்னா
புனே
ராய்ப்பூர்
ராஞ்சி
திருவனந்தபுரம்
விஜயவாடா
விசாகபத்னம்
டெல்லி
குர்கான்
நொய்டா
அகமதாபாத்
பெங்களூர்
ஹெமோர்ஹாய்டல் நோய் (மூல நோய்) என்பது ஏறக்குறைய 10% சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை தலையீடு தேவைப்படும் ஒரு நோய்க்கோளாறு ஆகும். கடுமையான உள் அல்லது வெளிப்புற மூல நோய்க்கட்டிகளை அகற்றுவதற்கான ஒரு அறுவை சிகிச்சை முறையே, ஹெமோர்ஹாய்டெக்டோமி எனப்படும். மூல நோய்க்கு மிகவும் பயனுள்ள மற்றும் வெற்றிகரமான சிகிச்சைகளில் இது ஒன்றாகும்.
மூல நோய்க்கான சிகிச்சைகளில் முதல் தேர்வாக, ஹெமோர்ஹாய்டெக்டோமி (மூல நோய் அறுவைச்சிகிச்சை) இருக்காது. மருத்துவ நிபுணர்கள் மற்ற அனைத்து சிகிச்சை முறைகளையும் பரிசோதித்து பயனளிக்காமல் போகும்போது, ஹெமோர்ஹாய்டெக்டோமி (மூல நோய் அறுவைச்சிகிச்சை) என்பது ஒரு பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான சிகிச்சையாக அமையும். மேலும், மூல நோய் கட்டிகளை முற்றிலும் அகற்றிட இச்சிகிச்சை முறை உதவுகிறது.
மூல நோய் கட்டிகளை சுருங்கச் செய்வது அல்லது மறையச் செய்வதே, இந்த அறுவைச் சிகிச்சையின் நோக்கம் ஆகும். இது மூல நோய் கட்டியை அகற்றுவதன் மூலம் அல்லது மூல நோய் கட்டிக்காண ரத்த ஓட்டத்தை குறைப்பதன் மூலம் செய்யப்படுகிறது.
மூல நோய் அறுவைச்சிகிச்சை பின்வரும் சூழ்நிலைகளில் செய்யப்படுகிறது:
Fill details to get actual cost
மூடியநிலை மூல நோய் நீக்கம் (ஹெமோர்ஹாய்டெக்டோமி)
மூடியநிலை மூல நோய் நீக்கம் (ஹெமோர்ஹாய்டெக்டோமி) என்பது ஒரு மருத்துவ முறையாகும், இது பொதுவாக உட்புற மூல நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. குறு மருத்துவ அரிவாள், கத்தரிக்கோல் அல்லது ஊடுகதிர் (லேசர்) போன்ற கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தி மூல நோய் கட்டிகளை அகற்றுவது இச்சிகிச்சை முறையில் அடங்கும். அதன் பிறகு உறிஞ்சக்கூடிய தையல் மூலம் முழுமையான காயம் மூடப்படும்.
மூடியநிலையில் செய்யப்பட்ட இந்த ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புள்ள அறுவை சிகிச்சைக்குப் பின் கடைப்பிடிக்க வேண்டியவை
இந்த அறுவை சிகிச்சை 95% வெற்றிகரமானது.
ஏற்பட வாய்ப்புள்ள அபாயங்கள் மற்றும் சிக்கல்கள் – வலி, இரத்தப்போக்கு, சிறுநீர் பாதையில் தொற்று, மலம் தாக்கம் மற்றும் மிகவும் அரிதாக, காயம் முறிவு மற்றும் குத இறுக்கம் உள்ளிட்டவை.
குறிப்பிட்ட அளவு அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டாலும், இச்சிகிச்சை முறை குறைந்த மறுநிகழ்வு விகிதங்களுடன் மிகவும் நம்பிக்கைக்குரிய நீண்ட கால குணமாக்கும் தன்மைகளை கொண்டுள்ளது.
திறந்தநிலை மூல நோய் நீக்கம் (ஹெமோர்ஹாய்டெக்டோமி)
மூடிய ரத்தக்கசிவு அறுவை சிகிச்சையைப் போல திறந்தநிலை மூல நோய் நீக்கம் பொதுவாக மேற்கொண்டு வருவதில்லை. இவ்வகை அறுவை செயல்முறையில், நாம் மேற்கண்ட மூடியநிலை மூல நோய் நீக்கச்செயல்முறையைப் போலவே மூல நோய் திசு அகற்றப்படுகிறது, ஆனால் இதில் அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்ட கீறல் திறந்தே இருக்கும்.
ஹெமோர்ஹாய்டல் (மூல நோய்) திசுக்களின் இடம் அல்லது அளவு காயத்தை மூடுவதை கடினமாக்கும் போது அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த வகையிலான அறுவை சிகிச்சையை தேர்வு செய்து பரிந்துரைக்கிறார்கள். திறந்தநிலையில் செய்யப்படும் இவ்வகை அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் சிக்கல்கள் மூடிய செயல்முறைக்குப் பிறகு ஏற்படும் சிக்கல்களைப் போலவே இருக்கும்.
ஸ்டேபிள் ஹெமோர்ஹாய்டெக்டோமி என்பது மூல நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு மேம்பட்ட அறுவை சிகிச்சை முறையாகும். இது முக்கியமாக நோயின் நிலைக்குறி 3 மற்றும் 4 மூலநோய் உள்ள நோயாளிகளுக்கும், குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு சிகிச்சை முறை மேற்கொண்டு தோல்வியுற்றவர்களுக்கும் செய்யப்படுகிறது.
ஒரு ஸ்டேபிள் ஹெமோர்ஹாய்டெக்டோமியின் போது, ஒரு ஸ்டேப்லிங் சாதனம் மூல நோய் திசுக்களின் வளையத்தை நீக்குகிறது, இது மூல நோயை மீண்டும் இயல்பு நிலைக்கு உயர்த்த உதவுகிறது.
ஆராய்ச்சிகள் இவ்வகை அறுவைச் சிகிச்சைக்கு பிந்தைய வலியானது மற்ற முறைகளைக்காட்டிலும் குறைவாகவே இருக்கும் என்றும் குணமடையும் வேகமும் அதிகம் என்றும் கூறுகிறது. ஆனால் மறுநிகழ்வு விகிதம் அதிகமாக கொண்டது இச்சிகிச்சை முறை என்று ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகிறது.
மூல நோய் கட்டு
வீட்டு சிகிச்சைகளுக்கு பதிலளிக்காத மூல நோய்க்கான சிகிச்சை முறையே, மூல நோய் கட்டு, அல்லது ரப்பர் பேண்ட் லிகேஷன் ஆகும். இந்த செயல்முறையானது மூல நோயின் அடிப்பகுதியை ஒரு பேண்டுடன் கட்டுவதன் மூலம், அந்த திசுப்பகுதிகளுக்காண இரத்த ஓட்டத்தை நிறுத்துகிறது. ரப்பர்-பேண்ட் பிணைப்பு முறை, அவசர கால சிகிச்சை ஊர்தி அமைப்பில் நடத்தப்படுகிறது, மேலும் குறைவான வலியை, இச்சிகிச்சை முறை ஏற்படுத்துகிறது மற்றும் மூல நோய்க்கட்டிகளை நீக்க செய்யப்படும் அறுவைசிகிச்சையை விட விரைவான மீட்பு காலத்தைக் கொண்டுள்ளது.
பக்கவாட்டு உள் சுருக்குத்தசை (ஸ்பிங்க்டெரோடோமி)
பக்கவாட்டு உள் சுருக்குத்தசை சிகிச்சை (ஸ்பிங்க்டெரோடோமி) என்பது உள் குத சுருக்குத்தசையைத் திறப்பதற்கான எளிய அறுவை சிகிச்சை முறையே ஆகும். இது சில சமயங்களில் சுருக்குத்தசையினால் அதிக (ஸ்பைன்க்டர்) அழுத்தங்களைக் கொண்ட நோயாளிகளுக்கு மூலநோய் அறுவைசிகிச்சையின் (ஹெமோர்ஹாய்டெக்டோமி) போது செய்யப்படுகிறது. இந்த நடைமுறையில், சுருக்குத்தசை (ஸ்பிங்க்டர்) வெட்டப்படுகிறது அல்லது நீட்டப்படுகிறது. ஸ்பிங்க்டர் (சுருக்குத்தசை) என்பது ஆசனவாயைச் சுற்றியுள்ள தசைகளின் குழுவாகும், இது குடல் இயக்கத்தைத் தடுக்கிறது.
ஹெமோர்ஹாய்டெக்டோமிக்கு முன்,
அறுவைச் செயல்முறைக்கு 6 முதல் 12 மணி நேரம் வரை எதையும் குடிக்கவோ சாப்பிடவோ வேண்டாம் என்று உங்கள் மருத்துவர் உங்களுக்குச் பரிந்துரைகள் வழங்கலாம்.
மேலும், மயக்க மருந்துக்குப் பின் ஏற்படும் விளைவுகள் காரணமாக, செயல்முறைக்குப் பிறகு வாகனங்களை நீங்களே வீட்டிற்கு ஓட்டிச் செல்ல முடியாது, எனவே உங்களை வீட்டிற்கு அழைத்துச்செல்ல யாராவது உங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Diet & Lifestyle Consultation
Post-Surgery Free Follow-Up
Free Cab Facility
24*7 Patient Support
பொதுவாக, இவ்வகை அறுவைச் சிகிச்சை ஒரு வெளிநோயாளர் மருத்துவ முறையாகும், ஆனால் சில சூழல்களில், இரவு மருத்துவமணையில் தங்க வேண்டியிருக்கலாம். இந்த நடைமுறையில், வீக்கம், தொற்று மற்றும் இரத்தப்போக்கு ஆகியவற்றைத் தடுக்க மருந்துகளை உட்செலுத்திவதற்கு ஒரு IV (நரம்புக் குழாய்) கையில் செருகப்படும். உங்களுக்கு பொது மயக்க மருந்து அல்லது குறிப்பிட்ட இடத்திற்கு மயக்க மருந்து வழங்கப்படும், அது உங்களைத் தூங்கச் செய்து உங்களை நகர முடியாமல் செய்யும். நீங்கள் தூங்கியதும், மருத்துவர் உள் மூல நோய் மற்றும் பிற மருத்துவ நிலைமைகளை நெருக்கமாக ஆய்வு செய்ய குத கால்வாயில் ஒரு கருவியை (ஸ்கோப்பைச்) செருகுவார்.
பின்னர் அவர்கள் வட்ட மூல நோய் திசுக்களை வெட்டுவார்கள். மூலநோய் திசுக்களை அகற்ற, திறந்தநிலை அல்லது மூடியநிலை அறுவைச் சிகிச்சை அல்லது ஸ்டேபிள்டு ஹெமோர்ஹாய்டெக்டோமி என எவ்வகையிலானா சிகிச்சை முறையையும் மேற்கொள்வார்கள். அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நோயாளியின் மருத்துவ நிலையைப் பொறுத்தே எந்த வகையான அறுவை சிகிச்சை செய்யப்படும் என்பது முடிவு செய்யப்படும்.
அறுவை சிகிச்சை முடிந்தவுடன், நீங்கள் ஒரு மீட்பு பகுதிக்கு மாற்றப்படுவீர்கள், அங்கு சில மணிநேரங்களுக்கு முக்கிய அறிகுறிகள் கவனிக்கப்படும். அறுவைசிகிச்சைக்குப் பிறகு விரைவில் நீங்கள் குடிக்கவும் சாப்பிடவும் முடியும், மேலும் சில மணிநேரங்களுக்குள், நீங்கள் முழுமையாக விழித்து, நிலையாக இருக்கும்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவீர்கள்.
சில சூழல்களில் வலிமிகுந்த சிகிச்சை தேர்வாக ஹெமோர்ஹாய்டெக்டோமி இருக்கலாம், ஆனால் இது மூல நோய்க்கு ஒரு பயனுள்ள மற்றும் நிரந்தர தீர்வைக் கொண்ட சிகிச்சை முறையாக இருக்கும்.
இவ்வகை சிகிச்சைக்கு பிந்தைய சிக்கல்கள் அரிதானவை மற்றும் பொதுவாக தீவிரம் குறைவாகவே இருக்கும்.
அவற்றுள் சிலவற்றை கீழே பட்டியலிடுகிறோம்..
மேலும், இச்சிகிச்சைக்குப் பிறகு தொற்று பொதுவாக ஏற்படுவது அல்ல.
இருப்பினும் தாங்கள் கீழ்க்கண்ட தொற்றுகளில் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்:
எந்தவொரு நோய்மை நிலையும் முறையாக மருந்துவ கண்காணிப்பு செய்யாமல் புறக்கணிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்காமல் விடப்பட்டால கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
மூல நோயும், இதைப்போலவே சிகிச்சை அளிக்காமல் விடப்பட்டால் சில கடுமையான ஆபத்துக்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும். அதன் விளைவுகள் வேதனையாக இருக்கும்.
நோய் மோசமடைவதற்கு வெகு முன்பாகவே, மூல நோயின் தொடக்க நிலையிலேயே மருத்துவரை அணுகி சிகிச்சையை சரியான நேரத்தில் பெற்றிடல் மிகவும் முக்கியமானது.
முறையான சிகிச்சை அளிக்காமல் விடப்பட்டால், மூலநோயால் இரத்த சோகை ஏற்படும். இதனால் குதத்தின் உட்புற திசுக்களுக்காண ரத்த ஓட்டம் தடைபடும்போது, அது நெறிகட்டிய மூல நோய்க்கு இட்டுச்செல்லும் அபாயம் கொண்டது. இந்த நிலை கடுமையான வலியை ஏற்படுத்துவதோடு, குடலிறக்கத்தையும் உண்டுபண்ணும்.
இரத்தப்போக்குடன் மலம் கழிக்கும் போது அசௌகரியம் அல்லது வலி போன்ற அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், சிறிய அறிகுறிகளைக் கூட புறக்கணிக்காதீர்கள். நிலை மேலும் மோசமடைவதற்கு முன் உங்கள் மருத்துவரை சிகிச்சைக்கு அணுகவும்.
இவ்வகை மூல நோய் அறுவைச் சிகிச்சைக்கு குறைந்தபட்ச செலவு சுமார் ரூபாய். 60,000 ஆகும். இது ரூபாய் 1,15,000 வரை ஆகலாம்.
அறுவை சிகிச்சையின் சரியான செலவு பல்வேறு காரணங்களால் மாறுபடும், அவற்றுள் முக்கியமானவற்றை கீழே காணலாம்..
மூலநோய்க்காண இவ்வகை அறுவைச் சிகிச்சை, பெரும்பாலும் மருத்துவ காப்பீட்டின் கீழ் உள்ளடங்கும். காரணம, இம்முறையிலான சிகிச்சை அறிகுறிகள் அடிப்படையில் அமைந்தது. இருப்பினும், உங்கள் காப்பீட்டு வழந்குநர்களிடம் இதுபற்றி கலந்து பேசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருப்பின் தெளிவு செய்துகொள்ளுங்கள்.
ஹெமோர்ஹாய்டெக்டோமி என்பது மூல நோயை அகற்றுவதற்கான ஒரு மருத்துவ அறுவைச் சிகிச்சை முறையாகும், இது அநேக சூழலீகளில், பொது மயக்க மருந்தின் கீழ் செய்யப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால், இது ஒரு பெரிய அறுவை சிகிச்சை முறையாகும. அறுவை செயல்முறைக்கு பிறகு நீங்கள் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு விடுமுறை எடுக்க வேண்டும்.
ஹெமோர்ஹாய்டெக்டோமி என்பது ஒரு குறு மருத்துவ அரிவாள் அல்லது பிற சிறப்பு கருவிகள் மூலம் பாதிக்கப்பட்ட மூல நோய் திசுக்களை அகற்றுவதை உள்ளடக்கிய சிகிச்சை. இந்த செயல்முறையின் காரணமாக சற்று வேதனையாக இருக்கலாம், ஆனால் கீறல் குணமாகும் வரை வலியைக் குறைக்க உங்கள் மருத்துவர் பல வழிகளை பரிந்துரைப்பார்.
இந்த வகையிலான சிகிச்சை முறையே பொதுவாக மூல நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இருப்பினும், உங்களது அன்றாட மலம் கழிக்கும் பழக்கத்தை எவ்வளவு சிறப்பாக மாற்றியமைக்கிறீர்களோ அதைப் பொறுத்தே அறுவைசிகிச்சையின் நீண்டகால வெற்றியானது அமையும்.
இவையுள் மலச்சிக்கல் தவிர்ப்பது மற்றும் அதீத சிரமமின்றி குடல் பயன்பாடுகள் அடங்கும்.
உட்புற மற்றும் வெளிப்புற மூலநோய்க்கு ஹெமோர்ஹாய்டெக்டோமி அறுவை சிகிச்சை சிறந்த தீர்வாகும். இந்த வகை குணப்படுத்தல், மூல நோய் மீண்டும் உருவாக சாத்தியங்களை மிகவும் குறைவாகவே கொண்டது. மூல நோய்க்கு மிகவும் பயனுள்ள மற்றும் நம்பகமான சிகிச்சையாகும்.
பால் பொருட்கள், சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற மலச்சிக்கலை ஏற்படுத்தும் உணவுகள் மற்றும் சர்க்கரைப் பொருட்களை அதிகமுடைய கேக், பைகள், டோனட்ஸ் மற்றும் காஃபின் கொண்ட பானங்கள் போன்ற தவிர்க்கவும்.
ஆண், பெண் இரு பாலினத்தவர்க்கும் மூல நோய் அதிகம் ஏற்படும். பொது மக்களில் பாதி பேருக்கு ஐம்பது வயதுக்கு மேல் மூல நோய் ஏற்பட சாத்தியங்கள் அதிகம். குறிப்பாக கர்ப்பம் மற்றும்
மூல நோய் ஆண், பெண் இருபாலருக்கும் அதிகம். அனைத்து மக்களில் பாதி பேருக்கு 50 வயதிற்குள் மூல நோய் இருக்கும். பல பெண்களுக்கு கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது மூல நோய் ஏற்படுகிறது, ஏனெனில் வயிற்றில் குழந்தையை சுமக்கும் அழுத்தம் இடுப்பு பகுதியில் உள்ள இரத்த நாளங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
குதச்சுருக்கம் (அனல்ஸ்ட்ரிக்சர்) / குத குறுக்கம் (ஸ்டெனோசிஸ்) என்பது ஹெமோர்ஹாய்டெக்டோமிக்குப் பிறகு மிகவும் பொதுவான சிக்கலாகும். ஸ்டெனோசிஸ் (குத குறுக்கம்) 1 முதல் 7.5% வழக்குகளில் ஸ்டேபிள் ஹெமோர்ஹாய்டெக்டோமியை சிக்கலாக்கும்.
தூக்குதல், வளைத்தல், குந்துதல் அல்லது உட்கார்ந்து வலியைத் தூண்டும் வாய்ப்பு உள்ளது. எனவே, அறுவைசிகிச்சைக்குப் பிறகு முதல் சில நாட்களுக்கு, நீங்கள் முடிந்தவரை கடுமையான செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
Sheela Barai
Recommends
Dr. Pankaj is very good and staaf is great
Jamil Akhtar
Recommends
I am thankful to Dr Piyush Sir u are really god doctor for fistula Surgery i am full satisfy and feeling really god and thank u pristyncare
Abdul Rahman
Recommends
I am extremely satisfied with attention I received.
devendra yadav
Recommends
bhut aache doctors hai pristyn me..